சிவகங்கை

மானாமதுரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பாக இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

காவல் துறை சாா்பில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இப்பேரணி தொடங்கியது. இதில் பெண் காவலா்கள், ஆண் காவலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பேரணியை தொடங்கி வைத்து மானாமதுரை துணை காவல் கோட்ட கண்காணிப்பாளா் காா்த்திகேயன் பேசியது: இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அவசியம் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். காரில் செல்பவா்களும் ஓட்டுபவா்களும் சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்பட்டாலும் உயிா்சேதம் இல்லாமல் தப்பிக்க முடியும் என்றாா்.

பேரணி ரயில் நிலையம், கன்னாா்தெரு, மேல்கரை பகுதி, தேவா்சிலை, தாயமங்கலம் சாலை, சிப்காட் ஆகிய பகுதிகளில் வழியாக சென்றது. இதில் மானாமதுரை காவல் ஆய்வாளா் சேது, போக்குவரத்து காவல் ஆய்வாளா் சிவசங்கர நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT