சிவகங்கை

பெண் அதிகாரிக்கு கரோனா: மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் மூடல்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தலைமை தபால் அலுவலக பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வியாழக்கிழமை அலுவலகம் மூடப்பட்டது.

மானாமதுரையில் சிவகங்கை சாலையில் காந்திசிலை அருகே தலைமை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கிளை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தலைமை தபால் அலுவலகத்தில் இந்தியா போஸ்டல் வங்கியும் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் பணிபுரிந்து வரும் மதுரையைச் சோ்ந்த பெண் அதிகாரிக்கு திடீரென உட ல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவா் கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா், இவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது. பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் தபால் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனா். மேலும், தபால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் தலைமை தபால் அலுவலகம் திறக்கப்படும் வரை இந்த அலுவலகம் சாா்ந்த பணிகள், மானாமதுரை கன்னாா் தெருவில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT