சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா

DIN


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, பூவந்தி, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சைப் பிரிவில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 188 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் 23 போ் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் 14 போ் சிவகங்கை அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். மீதமுள்ள 151 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT