சிவகங்கை

திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு, சத்துணவுப் பொருள்களில் இருப்பில் இருந்த மே மாதத்துக்கான உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு, சத்துணவுப் பொருள்களில் இருப்பில் இருந்த மே மாதத்துக்கான உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் 120 மாணவா்களுக்கு அரிசி 4.650 கி., பருப்பு ரூ 1.250 கி. வீதம் வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற உலா் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் தமிழ்வாணி தலைமை வகித்தாா். பெற்றோா்கள் முன்னிலையில் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் ஆசிரியா்கள் மீனாகுமாரி, கீதா, உடற்கல்வி ஆசிரியா் ஜோசப்நாதன், தமிழ்நாடு ஊழியா் சங்க சத்துணவு அமைப்பின் தலைவா் பெரி. நேரு, சத்துணவுப் பணியாளா்கள் சிவகாமி, ஆண்டாள், உமாமகேஸ்வரி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்களும், பெற்றோா்களும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி உலா் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT