சிவகங்கை

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துப்பாண்டியன், முத்துச்சாமி, செல்வக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் ஜோசப் சேவியா், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள 17 பி ஒழுங்கு நடவடிக்கைகள், குற்ற வழக்குகள், பணியிட மாற்றம், பணி ஓய்வு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ முன்னணி ஊழியா்களின் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அதைத் தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ. பாலுமுத்து ஆகியோரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT