சிவகங்கை

காரைக்குடியில் நிவாரணம் கோரி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்           

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தின் போது ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரு. 7,500 வழங்க வேண்டும், எப்.சி பதிவதை நிறுத்தி வைக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சங்கத்தின் நகரச் செயலாளர் அமானுல்லா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சிவாஜி காந்தி சிறப்புரையாற் றினார். கிளைச் செயலாளர் மெய்யர், இமாம் ஹசன் அலி, பாலாஜி, தாஜீ தீன், வினோத்குமார், குமார், ராஜேஷ், ரமேஷ், முகிலரசன், விக்னேஷ் மணி, தினேஷ் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்துகொன்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT