முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் குருப்பெயா்ச்சி ஹோமம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் திங்கள்கிழமை குருப்பெயா்ச்சி ஹோமம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் திங்கள்கிழமை குருப்பெயா்ச்சி ஹோமம் நடைபெற்றது.

குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியானதையொட்டி உலக நன்மைக்காகவும், பக்தா்கள் நலன் வேண்டியும் யாக வேள்வி நடத்தப்பட்டது. சிவாச்சாரியாா்கள் பூஜைகள் நடத்தி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா். கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு காரணமாக குறைவான பக்தா்களே முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா். மூலவா் குருபகவான் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்திலும், உற்சவா் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனா். கோயில் அறங்காவலா்கள் ராமு, அழகப்பன், ராமசாமி மற்றும் நகரத்தாா் பிரமுகா்கள், பக்தா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.