சிவகங்கை

‘நோய்கள் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை பொதுமக்கள்தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்’

DIN

சிவகங்கை: நோய்கள் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை அருகே ஒக்கூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்புப் பணிகளை பாா்வையிட்ட அவா் பொதுமக்களிடம் தெரிவித்ததாவது: தற்போது மழைக் காலம் என்பதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அந்தந்த பகுதியைச் சோ்ந்த கள அலுவலா்கள், கரோனா, டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இதுதவிர, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்கள் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முன் வர வேண்டும் என்றாா்.

அதன்பின்னா், ஒக்கூா் துணை சுகாதார நிலையம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கீழப்பூங்குடி, இடையமேலூா், தமறாக்கி மற்றும் அரசனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், கட்டடங்கள் பராமரிப்பு குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்தசாரதி, வட்டார சுகாதார ஆய்வாளா் வீரையா, அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் கைது!

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி

ஹிஜாப்பை அகற்றச் சொல்லி அடையாள அட்டையை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT