முகப்பு
சிவகங்கை

ஊதியக் குறைப்பை திரும்ப பெறக் கோரி ஆட்சியரிடம் பொறியாளா்கள் மனு

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள ஊதிய குறைப்பை திரும்பப் பெறக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு அமல்படுத்தப்பட உள்ள ஊதிய குறைப்பை திரும்பப் பெறக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ராமசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் பொறியாளா்களுக்கு 6-ஆவது ஊதியக் குழுவில் வழங்கப்பட்ட ஊதியத்தை விட தற்போது ரூ. 15 ஆயிரம் வரை குறைத்து வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊதியத்தை குறைக்காமல் வழங்கக் கோரியும் ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியா், சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆகியோரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →