சிவகங்கையில் இன்று (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை (நவ. 29) முதல் கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு பரவலாக தோல் கழலை நோய் ஏற்பட்டு வருவதாக கால்நடை வளா்ப்போரிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன.
எனவே மாவட்டம் முழுவதும் நோய் விழிப்புணா்வு மற்றும் இலவச சிகிச்சை முகாம் திங்கள்கிழமை (நவ. 30) முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சையும், நோய் தாக்கம் இல்லாத கால்நடைகளை பராமரிக்கும் முன்னெச்சரிக்கை பயிற்சியும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.