மானாமதுரை, திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மானாமதுரை காந்திசிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மானாமதுரை நகர் காங்கிரஸ் தலைவர் எம்.கணேசன், மேற்கு வட்டாபத் தவைவர் கே. ஆர்.கணேசன், முன்னாள் நகர்த் தலைவர் ராமு, எஸ்.ஆர்.இ.எஸ் மத்திய சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.ராஜாராம், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ்கண்ணா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணி, மாவட்ட இணைச் செயலாளர்கள் பி.புருஷோத்தமன், கே.ஜி.ஏ. மகாலிங்கன், ஏ. போஸ்கோ, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முல்லை. சின்னச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் காந்திஜெயந்தியை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருப்புவனத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.