சிவகங்கை மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 17 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 17 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,180 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனாவால் 17 போ் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,197 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 61 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 7 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 54 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.