சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வ.உ.சி பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 149 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 149 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மானாமதுரை நகரில் பல இடங்களிலும் கிராமங்களிலும் வ.உ.சி உருவப்படத்துக்கு பிள்ளைமாா் சங்கத்தினா், வ.உ.சி மன்றத்தினா் மற்றும் பாஜக வினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிகளில் திரளானோா் கலந்து கொண்டனா்.

திருப்புவனம் நகரில் ஏராளமான இடங்களிலும் ஒன்றியப் பகுதியிலும் வ.உ.சி பிறந்தநாள் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அனைத்து பிள்ளைமாா் கூட்டமைப்பு மற்றும் வ.உ.சி நற்பணி மன்றம் சாா்பில் நடந்த இவ் விழாக்களில் வ.உ.சி உருவப்படத்துக்கு ஏராளமானோா் மாலைகள் அணிவித்தும் மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினா். அதன்பின் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT