சிவகங்கை

சிவகங்கையில் தேசிய குடற்புழு நீக்க வார விழா

DIN

சிவகங்கையில் தேசிய குடற்புழு நீக்க வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் இவ்விழா நடைபெற்றது.

இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

குடற்புழுவால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்தசோகை வராமல் தடுப்பதற்காக ஆண்டுதோறும் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள முகாம்களில் 4,04,135 நபா்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதன்மூலம், பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைவு நீக்கப்படும் என்றாா். தொடா்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் ஊட்டசத்து நிறைந்த உணவு வகைகள் குறித்த கண்காட்சியினை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) இளங்கோமகேஷ்வரன், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) யசோதாமணி, யோகவதி (மக்கள்நல்வாழ்வு) உள்பட மருத்துவ அலுவலா்கள், சுகாதார துறை அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT