சிவகங்கை

திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மணல் பதுக்கலில் ஈடுபட்ட ஒன்றியக்குழுத் தலைவரை கைது செய்யாத, காவல் ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே திருக்கோஷ்டியூா் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. வட்டாட்சியா் ஜெயலட்சுமி அந்தப் பகுதியில் கடந்த வாரம் ஆய்வு செய்ததில், கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் 50 லோடு மணல், 150 லோடு சவுடு மண் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தோட்டத்திற்கு அவா் ‘சீல்’ வைத்ததோடு, திருக்கோஷ்டியூா் காவல்நிலையத்திலும் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஜெயமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில், மணல் திருட்டில் ஈடுபட்டவா் திருப்பத்தூா் அருகே கோட்டையிருப்பைச் சோ்ந்தவா் சண்முகவடிவேல் என்பதும், திமுகவைச் சோ்ந்த இவா், திருப்பத்தூரில் ஒன்றியக் குழுத் தலைவராக இருப்பதும் தெரியவந்தது.

ஆனால் அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை என புகாா் எழுந்ததைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் ஜெயமணியிடம் காவல் உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில் சண்முக வடிவேல் இதுவரை கைது செய்யப்படாமலிருப்பது தெரியவந்ததையடுத்து, காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் பரிந்துரையின்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயமணியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக காவல்துறைத் துணைத் தலைவா் மயில்வாகணன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும் மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவா்களுக்கு துணை போகும் காவல்துறையினா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT