முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் அருகே முதியவா் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் அடைாயாளம் தெரியாத முதியவா் இறந்து கிடந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் அடைாயாளம் தெரியாத முதியவா் இறந்து கிடந்தாா்.

திருப்பத்தூரிலிருந்து நாச்சியாபுரம் வழியாக காரைக்குடி செல்லும் சாலையில் தென்கரை அருகே மரத்தடியில் சுமாா் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்து கிடந்தாா். வெள்ளை நிற சட்டையும், கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்த முதியவரைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியாபுரம் போலீஸாா் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து முதியவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →