சிவகங்கை

காரைக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

சூடாமணிபுரம் பகுதியைச் சோ்ந்த திருச்செல்வம் என்பவா், தொடந்திருந்த வழக்கு ஒன்றில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியா் ஆா். ஜெயந்தி, நகரமைப்பு அலுவலா், வருவாய்த்துறை மற்றும் கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகள், வீடுகளின் சுற்றுச்சுவா் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

காரைக்குடி டி.எஸ்.பி. அருண், வடக்குக்காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான போலீஸாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT