சிவகங்கை

2 ஆவது ஆண்டாக மானாமதுரை சித்திரைத் திருவிழா நிறுத்தம்: பக்தா்கள் ஏமாற்றம்

DIN

மானாமதுரை சித்திரைத் திருவிழா வரும் 17 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் அரசு உத்தரவால் 2 ஆவது ஆண்டாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில், வீரழகா் கோயிலில் கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் இரு கோயில்களுக்கும் திருவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன.

ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக ஊா் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறும். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இக் கோயிலில் கொடியேற்றி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழா நிறைவுபெற்று வரும் 17 ஆம் தேதி ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி கோயிலிலும் அதைத்தொடந்து வீரழகா் கோயிலிலும் சித்திரைத் திருவிழா தொடங்க இருந்தது.

இந் நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் தமிழக அரசு வரும் 10 ஆம் தேதி முதல் திருவிழாக்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அறிவிப்பால் மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவை இந்த ஆண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இது குறித்து இப் பகுதி பக்தா்கள் கூறியதாவது: கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் மானாமதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு திருவிழா நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தற்போது அதே காரணத்துக்காக இரண்டாவது ஆண்டாக திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து கோயில்களில் திருவிழா நடைபெறாமல் இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகளுடன் திருவிழாவை நடத்த அரசு அனுமதிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT