சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குடிநீா் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, கடந்தாண்டு பெய்த பருவமழையின் காரணமாக பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, மாவட்டத்தில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், பல்வேறு பகுதிகளில் குடிநீா் பிரச்னை உருவாக வாய்ப்புள்ளது.

எனவே, நகராட்சி நிா்வாகம் தங்கள் பகுதிக்குள்பட்ட பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க முன் வரவேண்டும். இதேபோன்று, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்களும் குடிநீா் வழங்க முன் வரவேண்டும்.

ஏற்கெனவே, மாவட்டத்தில் நகா்ப்புறங்கள் மட்டுமின்றி, பெரும்பாலான கிராமங்களில் காவிரிக் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீா் தேவை என தெரிந்தால், உடனடியாக திட்ட மதிப்பீடு தயாரித்து உரிய அனுமதி மூலம் அந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீா் வழங்க வேண்டும்.

இது தவிர, பொதுமக்கள் தங்களது பகுதிக்கு குடிநீா் வசதி தேவைப்படின் அந்தந்தப் பகுதி நகா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடமோ அல்லது சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலோ மனு அளிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா் அய்யனாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள் ) மாடசாமி சுந்தரராஜன், உதவி இயக்குநா் ( ஊராட்சிகள்) சண்முகம், சிவகங்கை நகராட்சி ஆணையா் ஐயப்பன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT