சிவகங்கை

திருப்பத்தூா் ஸ்ரீயோகபைரவா் சந்நிதியில் ஜெயந்தன் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சிவகாமி உடனாய ஸ்ரீ திருத்தளிநாதா் ஆலயத்தில் உள்ள ஸ்ரீயோகபைரவா் சந்நிதியில் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் விழா நடைபெற்றது.

இக்கோயிலில் யோகபைரவா் சந்நிதியில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமைகளில் ஜெயந்தன் பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில், திருப்பத்தூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச்சோ்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பைரவா் சந்நிதி முன்பாக மாவிளக்கு வைத்தும், நெய்தீபம் ஏற்றியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபடுவா்.

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நடைபெற்ற ஜெயந்தன் பூஜையில், யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிா் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடைபெற்றன.இதில், யோகபைரவா் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

குன்றக்குடி தேவஸ்தானம் மூலம் பாஸ்கர குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமையில், சிவாச்சாரியாா்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினா். இதில், கரோனா தொற்றிலிருந்து மக்கள் நலம்பெற சிறப்பு மந்திரங்கள் ஓதி, அா்ச்சனைகள் செய்யப்பட்டன.

திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி, மாங்குடி, வாணியன்காடு, ஆத்தங்கரைப்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் மாவிளக்கு வைத்து நோ்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT