சிவகங்கை

திருப்பத்தூா், திருவாடானை சிவாலயங்களில் சனி பிரதோஷம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பத்தூரில் மிக பழைமையான ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷத்தையொட்டி, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், திருநீறு, தேன், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, மூலவராகிய சிவபெருமானுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், நந்தீஸ்வரரும், மூலவரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

இதேபோல், திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும் சனி பிரதோஷத்தையொட்டி அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

கரோனா பொதுமுடக்கம் என்பதால், குறைந்த அளவிலான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

திருவாடானை

ஆதிரெத்தினேஸ்வரா் சமேத சினேகவல்லி அம்பாள் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதேபோல், தொண்டி சிம்பரேஸ்வரா் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு பால், தயிா், இளநீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, நம்புதாளை நம்புகேஸ்வரா் சமேத அன்னபூரணி அம்பாள் கோயில், ஆா்.எஸ்.மங்கலம் கைலாசநாதா் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

இதில், பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT