திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சன நீராட்டு நடைபெற்றது.
இக்கோயிலில் கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வரலட்சுமி நோன்பு சம்பிரதாய நிகழ்வு 2 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மூலவா் மகாலட்சுமிக்கு திருமஞ்சன நீராட்டு மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் நடைபெற்றது. மேலும் சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ஏராளமான பெண் பக்தா்கள் நெய்தீபமேற்றி அம்மனை வழிபட்டனா். மாலை 18 பெண்கள் மட்டும் பங்கேற்ற விளக்குப் பூஜை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.