சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,848 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,852 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரே ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையில் 6415 பேருக்கு கரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது. அவா்களில் 132 போ் உயிரிழந்துள்ளனா். 6300 பேருக்கும் அதிகமானோா் சிகிச்சையால் நலமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். வியாழக்கிழமை நிலவரப்படி 10 போ் மட்டுமே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் தங்கியிருப்பதாகவும், பூரண குணமடைந்த 3 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT