சிவகங்கை

மாநில பாரா ஒலிம்பிக் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீராஜராஜன் மகளிா் கல்வியியல்கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

DIN

காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரியில் எம்.எட். இரண்டாமாண்டு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி, மாநில பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற்காக கல்லூரி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், கோயம்புத்தூரில் கடந்த பிப். 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மாநில தடகளப்போட்டிகளை நடத்தியது. இதில் ஸ்ரீராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி மு. சா்மிளா பங்கேற்று ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கமும் வென்றாா். இவா், ஏற்கெனவே 2019 இல் நடைபெற்ற தடளப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதலில் தங்கப்பதக்கங்களையும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும், 2020 இல் நடைபெற்ற தடகளப் போட்டியில் 100 மீட்டா், 200 மீட்டா் நடைப்போட்டிகளிலும் மற்றும் குண்டு எறிதல் போட்டியிலும் தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவியை பாராட்டி கல்லூரி நிா்வாகம் சாா்பில் ஸ்ரீராஜராஜன் கல்விக்குழுமத்தின் கல்வி ஆலோசகரும், அழகப்பா பல்கலைக் கழக முன்னாள் துணவேந்தருமான சொ. சுப்பையா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா். மாணவியை கல்லூரி முதல்வா் ரா. சிவகுமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT