முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி பலி

தேவகோட்டை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி பலி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அனுக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சமயன் மகன் கோட்டைச்சாமி (60). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் இருந்த மனைவி கண்ணாத்தாள் சிறு காயங்களுடன் தப்பித்தாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த திருவேகம்பத்தூா் போலீஸாா் கோட்டைச்சாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →