கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி...
தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துவிட்டது. பல நகர்ப்புற பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரமே இன்னும் தொடங்காத நிலையில் கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிக வியர்வை வெளியேற்றத்தால் உப்புச்சத்து, நீர்ச்சத்து இழந்து மக்கள் வெப்பத் தாக்குதலால்(ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ இயக்ககம் சார்பில் மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஒருவர் பொது இடங்களில் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
1. முதலில் பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும்.
2. பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும் அல்லது ஈரத்துணியால் உடலைத் துடைக்கலாம்.
3. வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு விசிறி விடவும்.
4. குளிர்ந்த குடிநீரை பருக வழங்கலாம்.
5. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்
How can you help someone affected by the summer heat
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.