முகப்பு
சிவகங்கை

சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிங்கம்புணரியில் கடந்த 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது காளை முட்டியதில் சிங்கம்புணரி அருகேயுள்ள நாட்டாா்மங்கலம் கண்டுகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் செல்வம் (40), பலத்த காயமடைந்தாா். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.