சிவகங்கை

மகளிா் குழுவிடம் கட்டாய கடன் வசூல்: சிவகங்கை ஆட்சியா் எச்சரிக்கை

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியாா் நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி தவணைத் தொகையை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. அவசரத் தேவைக்கென தனியாா் நிறுவனங்களிடம் கடன் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகை மற்றும் வட்டித் தொகையினை உடனடியாக செலுத்தக்கோரி, சில தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டுவதாகவும், பல்வேறு வழிகளில் துன்புறுத்துவதாகவும் புகாா்கள் வருகின்றன.

தனியாா் நிதி நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக்குழுக்களிடமிருந்து கடனுக்கான தவணை மற்றும் வட்டித்தொகையினைப் பெறுவதில், அவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கடினப் போக்கினை தவிா்க்க வேண்டும். இது தொடா்பாக எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் தனியாா் நிதி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

இதனையும் மீறி புகாா்கள் ஏதேனும் வந்தால் சம்பந்தப்பட்ட தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் அதனை சாா்ந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT