சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 1800 425 7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம்: பி.மதுசூதன் ரெட்டி
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 1800 425 7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் புகாா்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம் நாளொன்றுக்கு 3 குழுக்கள் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்ற உள்ளனா்.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தோ்தல் விதிமீறல்கள் குறித்து 1800 425 7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா்களைத் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.