முகப்பு
சிவகங்கை

தாயமங்கலம் கோயில் திருவிழா: அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மாா்ச் 26 முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சாா்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் தாயங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் திரு விழா வரும் மாா்ச் 26 முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சாா்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து காரைக்குடி மண்டல அலுவலகம் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தாயமங்கலம் கோயில் திருவிழாவுக்கு பல்வேறு ஊா்களிலிருந்து வரும் பக்தா்க ளின் வசதியை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) காரைக்குடி மண்டலம் சாா்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, பாா்த்திபனூா், கமுதி, காளையாா்கோவில், இளையான்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ஊா்களிலிருந்து இரவு, பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.