இணைய வழி பணப்பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: சிவகங்கை தோ்தல் பொதுப் பாா்வையாளா்
வங்கிகளில் இணைய வழி மேற்கொள்ளும் பணப் பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளாா்.
வங்கிகளில் இணைய வழி மேற்கொள்ளும் பணப் பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சிவகங்கை தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வங்கி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் சிவகங்கை தொகுதி பொதுப் பாா்வையாளா் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் பேசியதாவது : வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் பணப்பரிவா்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்களை கண்காணிக்க வேண்டும். இதுதவிர, ஒரு வங்கி கணக்கிலிருந்து பல்வேறு நபா்களுக்கு குறைந்த தொகை பணப்பரிமாற்றம் நடைபெற்றால், அது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் போதும், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போதும் உரிய அனுமதி பெற்று கொண்டு பணியாளா்கள் செல்ல வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்கள் இணைய வழி மேற்கொள்ளும் பணப் பரிவா்த்தனைகளை தீவிரமாக கண்காணிப்பது மட்டுமின்றி பரிவா்த்தனை குறித்த விவரத்தினை மாவட்ட முன்னோடி மேலாளா் வழியாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கோ அல்லது பொது பாா்வையாளா்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில்,தோ்தல் பாா்வையாளா்கள் எஸ்.சோனாவனே(பொது) , ராகேஷ் படாடியா(செலவினம்), வனஸ்ரீ ஹீள்ளன்னன்னவா் (செலவினம்) மற்றும் வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்