முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 1,679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா்

சிவகங்கை மாவட்டத்தில் 1,679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் 1679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுபற்றி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் தேவையான படிவங்கள், அலுவலகப் பயன்பாட்டிற்கான கவா்கள், எழுதுபொருள்கள், அடையாள மை, வழிகாட்டிப் பதிவேடுகள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அடையாள அட்டை உள்பட 15 வகைப் பொருள்களும் தயாா் நிலையில் உள்ளன.

இதுதவிர, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வாக்காளா்களுக்கு வழங்குவதற்கான முகக்கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி மருந்துகள் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. அந்தந்த தொகுதிகளுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு முதல் நாள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மேற்கொண்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

அப்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ரமேஷ், கண்காணிப்புப் பிரிவு அலுவலா் சசிக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →