சிவகங்கை

கீழடி அகழாய்வில் காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுப்பு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழாய்வில், காதில் அணியும் தங்க வளையம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய 4 இடங்களில் 7-ஆம் கட்டமாக அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா 3 குழிகளும், அகரத்தில் 1 குழியும் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கீழடியில் தோண்டப்பட்ட 1 குழியிலிருந்து காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீட்டா் நீளமும், வளையமாக வளைத்தால் 1.99 செ.மீ. விட்டமும் கொண்டதாக உள்ளது. இந்த வளையத்தை  ஆய்வுக்குள்படுத்திய பின்னரே இதன் காலம் தெரியவரும் என, தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT