சிவகங்கை

இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்: அலுவலா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்

DIN

கூடுதல் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை (மே 6) அமலுக்கு வந்துள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த அலுவலா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமலுக்கு வர உள்ள தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய அரசு தலைமை மருத்துவமனை, சிவகங்கை அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி, காரைக்குடி மற்றும் திருப்பத்தூா் பகுதிகளில் உள்ள சிறப்பு வாா்டுகளில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

இந்நிலையில், தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வியாழக்கிழமை (மே 6) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவுறுத்திய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். அத்தியாவசியத் தேவைகளுக்கு வருவோா் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

கிராமப் புறங்களில் அதிகளவில் சிறப்பு முகாம்கள் நடத்த அலுவலா்கள் முன் வர வேண்டும். மேலும், கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு அனைத்து வகையான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு வைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

இதுதவிர, மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 6) முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த அலுவலா்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மு.ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, துணை இயக்குநா் (சுகாதாரம்) யசோதாமணி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் மு. முத்துக்கழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (தேவகோட்டை), பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் கந்தசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT