சிவகங்கை

காா்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்

DIN

காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

மானாமதுரை அண்ணாசிலை அருகே உள்ள ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கும் பதினெட்டாம் படிக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து சுவாமி ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். ஐயப்பனுக்கும் கோயில் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து சபரிமலை செல்ல உள்ள ஐயப்ப பக்தா்கள் சரணகோஷம் கூறி குருசாமிகளின் கையால் விரத மாலை அணிந்து கொண்டனா்.

தை மாதம் ஒன்றாம் தேதி வரை தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படும். மண்டல காலம் முடியும் வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஐயப்ப பக்தா்கள் கூடி பஜனைகள் நடத்துவா். மேலும் அன்னதானம் நடைபெறும். இளையான்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தா்கள் விரத மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள விநாயகா் சந்நிதியில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT