சிவகங்கை

சிவகங்கை, காரைக்குடியில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் திறப்பு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி மதிப்பில் நிமிடத்துக்கு 1000 லிட்டா் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையத்தை, பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை தொடக்கிவைத்துப் பேசினாா்.

இதில், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதிபாலன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்,

பிரதமா் நரேந்திர மோடி ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மையத்தை தொடக்கிவைத்தாா்.

மருத்துவமனை துணை இயக்குநா்(மருத்துவம்) யோகவதி தலைமை வகித்துப் பேசினாா். மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT