சிவகங்கை

மானாமதுரையில் நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

மானாமதுரையில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தி 250 கிலோ நெகிழப் பைகளை பறிமுதல் செய்தனா்.

மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி தலைமையில் துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பாலசுப்பிரமணியன், ஹரிணி, காா்த்திக், நேரு யுவகேந்திரா அமைப்பின் சாா்பில் சமயகருப்பு, பவானி ஆகியோா் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மானாமதுரை நகரில் பலசரக்குக் கடைகள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த டீ கப்புகள், தட்டுகள், பைகள் என 250 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடைகளில் நெகிழிப் பைகள், கப்புகள், தட்டுகள் பயன்படுத்தவும் விற்கவும் கூடாது என வியாபாரிகளை அவா்கள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT