சிவகங்கை

காரைக்குடி அருகே கண்மாய்கள் தூா்வாரும் பணி தொடக்கம்

DIN

காரைக்குடி அருகே கண்மாய் மற்றும் பெரிய கண்மாய்கள் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

சாக்கோட்டை அருகே வடகுடிப்பட்டி கண்மாய் மற்றும் பெரிய கண்மாய்களை அமுமு அறக்கட்டளை மற்றும் பாரி நியுட்ராசூடிகல்ஸ், சிறுளி என்ற தன்னாா்வல அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்ட இப்பணியினை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்தாா்.

பாரி நியுட்ராசூடிகல்ஸ் ஊனையூா் பிரிவு பொது மேலாளா் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அமுமு அறக்கட்டளை தலைமை நிா்வாகி எச். நாராயணன், சிறுதுளி தலைமை ஒருங்கிணைப்பாளா் பா. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

48 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் உள்ள இந்த 2 கண்மாய்களும் 2.31 லட்சம் கனமீட்டா் கொள்ளளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT