சிவகங்கை

குழந்தைகள் நலக் குழுவில் தலைவா், உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக் குழுவில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித நல மருத்துவம், கல்வி அல்லது மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா். தொடா்ச்சியாக இருமுறை பதவி வகிக்க இயலாது.

எனவே மேற்கண்ட தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரா்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், பெரியாா் நகா், முதல் தெரு, திருப்பத்தூா் மெயின் ரோடு, சிவகங்கை மாவட்டம் - 630 561 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575 - 240166 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT