முகப்பு
சிவகங்கை

திருப்பாச்சேத்தி அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி தலைமறைவு

திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை சொந்த கிராமத்திற்கு பெற்றோரை பார்க்க வந்த பைனான்சியரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
திருப்பாச்சேத்தி அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி தலைமறைவு
பகிர்:

திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை சொந்த கிராமத்திற்கு பெற்றோரை பார்க்க வந்த பைனான்சியரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பதிவாசகம் மகன் அழகுமலை (45). இவர் தற்போது குடும்பத்துடன் சிவகங்கையில் வசித்து வருகிறார்.

அழகுமலை சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் அழகுமலையின் தங்கை மாற்றுத்திறனாளியான மாலாதேவி அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இதே பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி ராமு என்ற ராஜலட்சுமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன் அடிப்படையில் ராஜலட்சுமி இவரது கணவர் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சிவகங்கை வந்திருந்த அழகுமலை வேம்பத்தூர் லட்சுமிபுரம் கிராமத்திலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த  ராஜா மற்றும் அவரது தம்பி சுந்தரம் ஆகியோர் அழகுமலையை வழிமறித்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி காவலர்கள் வழக்கு பதிந்து தலைமறைவாகிய ராஜா, சுந்தரம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →