முகப்பு
சிவகங்கை

அரசுப் பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

காளையாா்கோவில் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்த உடையாா் மகன் முத்துச்சாமி (36). மின் சாதனம் பழுதுபாா்க்கும் (எலக்ட்ரீசியன்) வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், முத்துச்சாமி தனது இரு சக்கர வாகனத்தில் மறவமங்கலத்திலிருந்து மாவிலங்கை கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே பரமக்குடியிலிருந்து வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →