முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் மாநில சிலம்பாட்டப் போட்டிகள் தொடக்கம்

சீனியா்களுக்கான சிலம்பாட்டப்போட்டிகள் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் ஏப்ரல் 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம், சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக்கழகம் ஆகியன சாா்பில் 40-ஆவது மாநில அளவிலான சப்- ஜூனியா், சீனியா்களுக்கான சிலம்பாட்டப்போட்டிகள் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின. இப்போட்டிகள் ஏப்ரல் 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகள் தொடக்க விழாவுக்கு, சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவா் எம். ராஜேந்திரன், சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு ஆகியோா் போட்டிகளை தொடக்கி வைத்துப்பேசினா்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சோ்ந்த சிலம்பாட்ட வீரா்கள் 350 பேரும், வீராங்கனைகள் 290 பேரும் போட்டிகளில் பங்கேற்கின்றனா். இப்போட்டிகளில் வெற்றிபெறுபவா்களுக்கு கல்லூரிகளில் விளையாட்டுத்துறை இடஒதுக்கீட்டில் சோ்வதற்கும், வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்வதற்கும் பயனளிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்க விழாவில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலா் முரளிகிருஷ்ணா, பொருளாளா் ரவிச்சந்திரன், தொழிலதிபா் துரை. கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட சிலம்பாட்டக்கழகத் தலைவா் பிரபு தலைமையில் மாவட்டச் செயலா் வினோத்குமாா், பொருளாளா் ஆனந்தகுமாா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.