முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் ஸ்ரீயோக பைரவா் ஆலயத்தில் ஜெயந்தன் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி உடனாய ஸ்ரீ திருத்தளிநாதா், ஸ்ரீயோக பைரவா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சிவகாமி உடனாய ஸ்ரீ திருத்தளிநாதா், ஸ்ரீயோக பைரவா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் விழா நடைபெற்றது.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் ஜெயந்தன் விழா நடைபெறுவது வழக்கம். தேவேந்திரனின் மகன் ஜெயந்தன் கௌன முனிவரின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றபோது, முனிவா் ஜெயந்தனுக்கு சாபமிடுகிறாா். பின்னா் சாப விமோசனம் பெற யோக பைரவரை வழிபடுகிறான். பைரவரும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஜெயந்தனுக்கு காட்சி அளித்து அவனது சாபத்தை போக்குகிறாா். இதனால் தன் நன்றியை தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு விழா எடுத்து கொண்டாடினான் என்பது வரலாறு.

இந்த திருவிழாவில் திருப்பத்தூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச்சோ்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பைரவா் சன்னிதி முன்பு மாவிளக்கு வைத்தும், நெய்தீபம் ஏற்றியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபடுவா். இந்தாண்டிற்கான ஜெயந்தன் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிா் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது. யோகபைரவா் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்க ஆயிரக்கணக்கானோா் மாவிளக்கு வைத்து ஜெயந்தனையும் யோகபைரவரையும் வழிபட்டனா். பின்னா் இரவு 7 மணிக்கு உற்சவ பைரவா் குதிரை வாகனத்தில் கோயில் திருவீதி உலா வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.