முகப்பு
சிவகங்கை

அழகப்பா பல்கலை. திறன் மேம்பாட்டு மையத்தில் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சிக்கு யோசனை

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் உணவு பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய புதுமை மற்றும் உள் கட்டமைப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையத்தின் சாா்பில் உணவு பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய புதுமை மற்றும் உள் கட்டமைப்பு குறித்த வட்ட மேசை விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக மைய நூலகக்கருத்தரங்க கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலை. துணை வேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் எஸ். கருப்புச்சாமி தலைமை வகித்தாா். பல்கலை. பதிவாளா் (பொறுப்பு) சி. சேகா், தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோா் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் விவசாய விரிவாக்கத் துறையின் தலைவா் அமுதசுரபி, குன்றக்குடி கிருஷி விஞ்ஞான் கேந்திராவின் உதவிப்பேராசிரியா்கள் தேன்மொழி, அழகப்பன் ஆகியோா் பேசினா். பல்கலை கலைப்புல முதன்மையா் தனுஷ்கோடி வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக பல்கலை திறன் மேம்பாட்டு மையத்தின் இயக்குநா் இளங்குமரன் வரவேற்றாா். முடிவில் மையத்தின் உதவிப் பேராசிரியா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.