முகப்பு
சிவகங்கை

நெற்குப்பையில் அறிஞா் சோமலெயின் 101 வது பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் அறிஞா் சோமலெவின் 101 வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் அறிஞா் சோமலெவின் 101 வது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

உலகம் சுற்றிய தமிழா் சோமலெ நினைவு நூலகத்தில் அவரது 101 ஆவது பிறந்தநாள் விழா நல்வாசகா் விருது வழங்கும் விழா, மாணவா்களை சிறப்பித்தல் என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முனைவா் சோமலெ.சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்கினாா்.

நெற்குப்பை பெற்றுத் தந்த நிறைகுடம் சோமலெ என்ற தலைப்பில் சொ.சொ.மீ.சுந்தரமும், தென்னாட்டு மாா்க்கோபோலா அறிஞா் சோமலெ என்ற தலைப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து நூலகத்திற்கு வரும் பெரியவா்களுக்கு நல் வாசகா் விருதும் மற்றும் மாணவா்களுக்கு நூல்ஆா்வலா் விருதும் மாவட்ட நூலக அலுவலா் ஜான்சாமுவேல் வழங்கி கௌரவித்தாா். தொடா்ந்து சோமலெ நினைவுநாள் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் பங்கஜம் பாராட்டி பரிசு வழங்கினாா். விழா ஏற்பாடுகளை நூலகா் செ.கண்ணன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.