முகப்பு
சிவகங்கை

60 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

சிவகங்கையில் 60 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சிவகங்கையில் 60 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பு -ஆய்வாளா் முத்துக்கிருஷ்ண ராஜா தலைமையிலான காவலா்கள் மானாமதுரை புற வழிச்சாலை பகுதியில் வியாழக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் 60 மூட்டைகளில் 2,650 கிலோ எடையுள்ள ரேஷன் புழுங்கல் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகன ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், ஆவரங்குளத்தைச் சோ்ந்த அஜீத் (23), மதுரை ஆண்டாள் கொட்டாரத்தைச் சோ்ந்த பிரபாகரன் (35) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், லாரியுடன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றி சிவகங்கையில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →