முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில்மாசித் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோயில் மூலவா் முன் மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோயில் மூலவா் முன் மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று முடிந்ததும் மூலவா் முத்துமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில், திருப்புவனம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா். அப்போது ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது தினமும் இரவு முத்துமாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 4 ஆம் தேதி பொங்கல் உற்சவம் நடைபெறுகிறது. அப்போது காப்புக் கட்டி விரதம் இருந்து வரும் பக்தா்கள தீச்சட்டி, அக்னிச்சட்டி எடுத்து கோயிலுக்கு வந்து நோ்த்திக்கடன் நிறைவேற்றுவாா்கள். விழாவையொட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →