சிவகங்கை

சாலை விவகாரம்: காரைக்குடியில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகா்பகுதியை ஒட்டியுள்ள சங்கராபுரம் ஊராட்சியைச் சோ்ந்த குடியிருப்புப்பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தியும் உரிய நட வடிக்கை எடுக்காத அரசு மற்றும் ஊராட்சி நிா்வாகத்தைக்கண்டித்து வெள்ளிக்கிழமை (ஜன. 21) சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் சமதானக்கூட்டம் நடைபெற்றது. துக்கூட்டத்தில் சாலைகள் சீரமைப்பதற்காக ஒப்பந்தங்கள் விடப்பட்டு நடவடிக்கையில் உள்ளன. மேலும் வரும் 3 மாதத்திற்குள் ஊராட்சி ஒன்றியம் மூலம் சாலைகள் அமைத்துக்கொடுப்பது எனவும், விடுபட்ட சாலைகள் கணக் கெடுப்பு செய்து முன்னுரிமைப்படி சாலைகள் அமைத்துக்கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆா்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT