சிங்கம்புணரியில் சாலை விபத்தில் இளைஞா் பலி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் குமாா் (36). இவா் சிங்கம்புணரி தெற்குத்தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். வாகன ஓட்டுநரான இவா் புதன்கிழமை இரவு தனது இருசகக்கர வாகனத்தில் நீதிமன்றம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக செங்கல் ஏற்றி வந்த லாரி மீது இவரது வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து சிங்கம்புணரி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.