முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 11-இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை

 சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா வரும் ஜூலை 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 வரை சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கையினை நடத்த உள்ளனா். இந்த மேளாவில் ஐடிஐ பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94990 55781 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →